CINEMA
பெண்கள் யாராவது இப்படி சொன்னால் எனக்கு செம கடுப்பாகும்.. திருமணத்திற்குப் பிறகு முதல் முறையாக மனம் திறந்த நடிகர் அசோக் செல்வன்..!!

தமிழ் திரையுலகில் இளம் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அசோக் செல்வன். இவர் தெகிடி, சூது கவ்வும், கூட்டத்தில் ஒருத்தன் போர் தொழில் உள்ளிட்ட பல சிறப்பான திரைப்படங்களில் நடித்த ரசிகர்களை கவர்ந்துள்ளார். தற்போது ப்ளூ ஸ்டார் என்ற திரைப்படத்தில் இவர் நடித்து வரும் நிலையில் சமீபத்தில் நடிகை கீர்த்தி பாண்டியனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரின் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து இவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் இவருக்கு வாழ்த்து தெரிவித்தது மட்டுமல்லாமல் சிலர் இவ்வளவு அழகா இருக்க நீங்க ஒண்ணுமே இல்லாத கீர்த்தி பாண்டியனை ஏன் திருமணம் செய்து கொண்டீர்கள் என்று பல விமர்சனங்களும் எழுந்தன. இதற்கு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அசோக் செல்வன் பதிலளித்துள்ளார். அதில் நீங்கள் எதை பார்த்து அழகு என்று சொல்கிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை, வெள்ளையாக இருந்தால் அழகா உங்களுக்கு என்று கேள்வி கேட்டார். இதற்கு பதில் அளித்த பெண் தொகுப்பாளர், இப்போது உள்ள பெண்கள் நாங்கள் எல்லாம் அப்படி உள்ளவர்களை தான் சைட் அடிப்போம் என்று கூறினார்.
அதற்கு பதில் அளித்த அசோக் செல்வன் வெள்ளை என்பது நிறம் தான் அழகு கிடையாது புரியுதா, வெள்ளையாக இருப்பவன் அழகு கருப்பாக இருப்பவன் அழகு இல்லை என்பதெல்லாம் தவறான ஒன்று. உங்களது புரிதலை மாற்றிக் கொள்ளுங்கள் பெண்கள் யாராவது எனக்கு வெள்ளையாக இருக்கும் மாப்பிள்ளை வேண்டும் என்று சொல்வதை கேட்டாலே எனக்கு கடுப்பாகும் என்று அசோக் செல்வன் வெளிப்படையாக பேசியுள்ளார்.