CINEMA
ரிலீசுக்கு முன்பே இத்தனை கோடி வசூலா?.. மாஸ் காட்டும் ஜெயம் ரவியின் படம்.. எவ்வளவு தெரியுமா?.. செம குஷியில் ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஜெயம் ரவி. இவர் இறுதியாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். இதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் அடுத்ததாக இறைவன் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் ஜெயம் ரவி 30, சைரன் மற்றும் தனி ஒருவன் 2 உள்ளிட்ட பல திரைப்படங்களை ஜெயம் ரவி கைவசம் வைத்துள்ளார். இந்த நிலையில் ராஜேஷ் இயக்கத்தில் முதல் முறையாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் தான் ஜெயம் ரவி 30.
இந்த திரைப்படத்திற்கு இதுவரை தலைப்பு வைக்கப்படாத நிலையில் ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று கூறப்படுகின்றது. அதே சமயம் இந்த படத்தில் பிரியங்கா மோகன் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கும் நிலையில் இந்த படத்தின் பிரீ பிசினஸ் எதிர்பார்க்காத வசூலை கொடுத்துள்ளது. அதாவது ஜெயம் ரவி 30 திரைப்படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமை சுமார் 37 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் ஹிந்தி டப்பிங் உரிமை 8 கோடிக்கும் ஆடியோ உரிமை 2.5 கோடிக்கும் விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் வெளியாவதற்கு முன்பே கிட்டத்தட்ட ஐம்பது கோடி வரை பிசினஸ் செய்யப்பட்டுள்ள நிலையில் தயாரிப்பாளருக்கு பணம் கைக்கு வந்துவிட்டது. இதனால் படம் ரிலீஸ் ஆன பிறகு அதிக அளவு வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.