LATEST NEWS
இயக்குனர் பிறந்த நாளை வேற லெவலில் கொண்டாடிய சந்திரமுகி 2 படக்குழு.. அனைவருக்கும் திடீரென இன்ப அதிர்ச்சி கொடுத்த பி.வாசு..!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ராகவா லாரன்ஸ் நடிப்பில் இயக்குனர் பி. பாசு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் சந்திரமுகி 2. இதில் கங்கனா ரனாவத், வைகைப்புயல் வடிவேலு, ராதிகா சரத்குமார் மற்றும் லட்சுமிமேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். மிக பிரம்மாண்டமான பொருட்ச அளவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் வெளியீட்டு பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் பி வாசுவின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் அவரை ஜி கே எம் தமிழ் குமரன், ராகவா லாரன்ஸ் மற்றும் பி வாசுவின் உதவியாளர்கள் அனைவரும் நேரில் சந்தித்து கேக் வெட்டி கொண்டாடினர்.
அந்த கொண்டாட்டத்தின்போது இயக்குனர் பி வாசு தன்னுடைய உதவியாளர்கள் அனைவருக்கும் லேப்டாப்புகளை பரிசாக வழங்கி தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். தற்போது இவர் இயக்கியுள்ள சந்திரமுகி 2 திரைப்படம் செப்டம்பர் 28ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
P Vasu surprised his Assistants with brand new laptops on his birthday. The gift was a token of appreciation for their dedication and support while working on #Chandramukhi2!
Lawrence and Lyca Productions head Tamil Kumaran joined in the celebration and wished the director on… pic.twitter.com/HGUJRq2yYz
— Christopher Kanagaraj (@Chrissuccess) September 15, 2023