CINEMA
டைம் ட்ராவல் மையப்படுத்தி வெளியான தமிழ் திரைப்படங்கள்… இதோ சிறப்பு தொகுப்பு..!!

சினிமாவை பொறுத்தவரை சயின்ஸ் பிக்சன் படங்களுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு கிடைக்கும். அதிலும் குறிப்பாக டைம் ட்ராவல் பற்றிய கதைகள் என்றால் எந்த மொழி படங்களாக இருந்தாலும் ரசிகர்கள் அதிகம் விரும்புவார்கள். அப்படி தமிழில் டைம் டிராவல் கதையைக் கொண்டு வெளியான படங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
இன்று நேற்று நாளை:
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் டைம் டிராவல் மெஷின் கிடைத்த இரண்டு நண்பர்கள் அதனை வைத்து எப்படி எல்லாம் சம்பாதிக்க முடியும் என்பதை முயற்சி செய்து பார்க்கும் கதை தான் இது. இயக்குனர் ஆர் ரவிக்குமார் இயக்கிய இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
24:
நடிகர் சூர்யா மற்றும் சமந்தா நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்தை இயக்குனர் விக்ரம் குமார் இயக்கியிருந்த நிலையில் டைம் டிராவல் மெஷினை வாட்சில் செட் பண்ணி வைக்கும் அறிவியல் விஞ்ஞானியாக சூர்யா . இந்த படத்தில் மூன்று வித்தியாசமான கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருந்த நிலையில் படம் நல்ல வரவேற்பை பெற்றது.
டிக்கிலோனா:
கடந்த 2021 ஆம் ஆண்டு சந்தானம் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் டைம் ட்ராவல் மெஷின் கதையிலேயே முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்து எடுக்கப்பட்டது. தன்னுடைய வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லாததால் கிடைத்த டைம் டிராவல் மெஷினை வைத்து பின்னோக்கிச் சென்று வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள திட்டமிடும் கதாநாயகனின் கதை தான் இது.
ஜாங்கோ:
இயக்குனர் மனோ கார்த்திகேயன் இயக்கத்தில் சதீஷ் மற்றும் மிருநாளினி ரவி நடித்த இந்த திரைப்படம் டைம் டிராவல் மெஷினை வைத்து தனது மனைவியை மரணத்திலிருந்து காப்பாற்ற நினைக்கும் கதை களத்தை கொண்டது. கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மாநாடு:
நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் டைம் லுக் என்ற சயின்ஸ் பிக்சன் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக அமைந்தது எஸ்கே சூர்யாவின் வில்லத்தனமான நடிப்புதான்.
மார்க் ஆண்டனி:
நடிகர் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் மார்க் ஆண்டனி. டைம் டிராவல் மெஷினை வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.