ஒட்டு துணி இல்லாமல் நடிச்சப்ப எனக்கு இப்படி தான் தோணுச்சு.. நடிகை அமலா பால் பரபரப்பு பேச்சு..!! - Cinefeeds
Connect with us

CINEMA

ஒட்டு துணி இல்லாமல் நடிச்சப்ப எனக்கு இப்படி தான் தோணுச்சு.. நடிகை அமலா பால் பரபரப்பு பேச்சு..!!

Published

on

தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகையாக திகழும் அமலாபால் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் ஆடை. இந்தத் திரைப்படத்தை எஸ்கே ஸ்டுடியோ தயாரித்திருந்த நிலையில் திரில்லர் படமாக எடுக்கப்பட்ட இந்த படத்தில் அமலாபால் மிகவும் போல்டான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அதிலும் குறிப்பாக ஆடை இல்லாமல் இவர் நடித்திருந்த நிலையில் இந்த திரைப்படம் திரையுலகில் மிகப்பெரிய சலசலப்பையும் ஏற்படுத்தியது.

ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாத நிலையில் விமர்சன ரீதியாக அமலா பாலுக்கு பாராட்டுகள் கிடைத்தன. இந்த படத்தில் அமலாபால் நிர்வாணமாக நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டபோது இந்த காட்சி எக்காரணத்தைக் கொண்டும் வெளியே சென்று விடக்கூடாது என்று படக்குழு மிகவும் கவனமாக இருந்தது.

அந்த பில்டிங் உள்ளே 15 ஆண்கள் மட்டுமே இருந்ததாகவும் ஒரு பெண் கூட கிடையாது என்று அமலா பால் இந்த படத்தின் ஆடியோ லான்ச் போது தெரிவித்தார். அது மட்டுமல்லாமல் நிர்வாண காட்சிகளில் நடிக்கும் போது மிகவும் தயக்கமாக இருந்ததாகவும் இத்தனை பேர் முன்பு ஆடையின்றி எப்படி நடிப்பது என்ற ஒரு மோசமான மனநிலையில் தான் இருந்ததாகவும் அவர் வெளிப்படையாக கூறியுள்ளார்.

அதேசமயம் படப்பிடிப்பின் போது தனக்கு முன்பு இருந்த அந்த 15 பேரும் தன்னுடைய பதினைந்து கணவர்கள் என்று மனதில் நினைத்துக் கொண்டு அந்த காட்சியில் நடிக்க ஆரம்பித்தேன் எனவும் அமலாபால் வெளிப்படையாக பேசியிருந்த நிலையில் தற்போது தற்போது அந்தச் செய்தி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.