“என்ன ஒரு மாஸ்டர் பிளான்..” 20 பெண் காவலர்களை அசால்ட்டாக ஏமாற்றி.. ரூ.24 லட்சம் சுருட்டிய 23 வயது இளைஞர்.. சினிமா கதையையே மிஞ்சிய நிஜ ‘ஜென்-சி’ ரிக்கி பஹ்ல்..!! – cinefeeds
Connect with us

CRIME

“என்ன ஒரு மாஸ்டர் பிளான்..” 20 பெண் காவலர்களை அசால்ட்டாக ஏமாற்றி.. ரூ.24 லட்சம் சுருட்டிய 23 வயது இளைஞர்.. சினிமா கதையையே மிஞ்சிய நிஜ ‘ஜென்-சி’ ரிக்கி பஹ்ல்..!!

Published

on

டெல்லியைச் சேர்ந்த 23 வயதுடைய விக்ராந்த் தோமர் என்ற இளைஞர், இன்ஸ்டாகிராம் மூலம் தன்னை ஒரு பெரிய கோடீஸ்வர வணிகராகக் காட்டிக்கொண்டு, திருமணம் செய்வதாக வாக்களித்து சுமார் 20 பெண் காவலர்களிடம் இருந்து 24 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றியதாகக் கூறப்படும் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கபூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்த நிலையில், ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான ‘லேடீஸ் வர்சஸ் ரிக்கி பஹ்ல்’ (Ladies vs Ricky Bahl) திரைப்படத்தின் கதாப்பாத்திரத்தை ஒத்திருப்பதால், இந்தச் சம்பவம் இணையத்தில் ‘நிஜ வாழ்க்கை ஜென்-சி ரிக்கி பஹ்ல்’ என்று வைரலாகி வருகிறது.

விசாரணையின் போது, விக்ராந்த் தோமர் ஆடம்பர கார்களை வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்ட பெண்களை நம்ப வைப்பதற்காக அவர்களை வெளியே அழைத்துச் சென்றது தெரியவந்துள்ளது. பெண்களுடன் நட்பை ஏற்படுத்தி திருமண உறுதியளித்த பின், லாபகரமான முதலீடுகள் மற்றும் பல்வேறு காரணங்களைக் கூறி அவர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணத்தை வசூலித்துள்ளார்; மேலும், அதே தொகுதியைச் சேர்ந்த டெல்லி பெண் காவலர் ஒருவருடன் அவர் வாழ்ந்து வந்ததாகவும், அந்தத் தொடர்பைப் பயன்படுத்தி மற்ற காவலர்களை அவர் குறிவைத்திருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

Advertisement

இந்த மோசடி விவகாரம் சமூக வலைத்தளங்களில் வெளியானதும், ஒரே தொகுதியைச் சேர்ந்த 20 பெண்கள் ஏமாற்றப்பட்டிருப்பது மிகப்பெரிய திட்டமிட்ட செயலாக உள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது பல புகார்களை எதிர்கொண்டுள்ள இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருவதுடன், இணையவாசிகள் பலர் இது குறித்துத் திரைப்பட வசனங்களை இணைத்து நகைச்சுவையாகவும் அதிர்ச்சியுடனும் பதிவுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in