CINEMA
KGF 2 படத்திற்கு சிறந்த கன்னட படத்திற்கான தேசிய விருது அறிவிப்பு…!!

2002 ஆம் வருடத்திற்கான 70 வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது இதில் வென்றவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் KGF 2 படத்திற்கு சிறந்த கன்னட படத்துக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2022இல் வெளியான இந்த படம் அதிகளவில் வசூலை குவித்து சாதனை படைத்தது.
இந்நிலையில், தேசிய விருதுக்கான அறிவிப்பை மத்திய அரசு டெல்லியில் வெளியிட்டது. இதில், KGF 2 படத்திற்கு சிறந்த கன்னட படத்திற்கான விருது, குல்மோஹருக்கு சிறந்த ஹிந்தி படத்துக்கான விருது, கார்த்திகேயா 2 படத்திற்கு சிறந்த தெலுங்கு படத்துக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.