வா தலைவா வா…! வெளியானது நடிகர் தனுஷின் 50-வது படத்தின் புது அப்டேட்…! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…! - cinefeeds
Connect with us

LATEST NEWS

வா தலைவா வா…! வெளியானது நடிகர் தனுஷின் 50-வது படத்தின் புது அப்டேட்…! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் தனுஷ். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். . இந்த ஆண்டு இவர் நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவான ‘வாத்தி’ திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது.

இயக்குனர் செல்வராகவன் கூட்டணியில் ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் ‘வடசென்னை 2’, இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் புது படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதை தொடர்ந்து இந்தியில் பிரபல திரைப்படமான ‘ராஞ்சனா’, ‘அத்ரங்கி ரே’ ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குனர் ஆனந்த் எல் ராய் உடன் கூட்டணி அமைத்துள்ளார் நடிகர் தனுஷ். ‘தேரே இஷ்க் மெய்ன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது குறிப்பிடதக்கது.

Advertisement

 

தற்பொழுது தனுஷ் தமிழில் நடித்து வரும் ‘கேப்டன் மில்லர்’ ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆவலை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து நடிகர் தனுஷ் தனது 50 வது படத்தை தானே இயக்கி நடிக்க உள்ளார் . தற்போது இதற்கு தற்காலிகமாக ‘D 50’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் எஸ் ஜே சூர்யா, சந்தீப் கிஷான், ஜெயராம் காளிதாஸ்,  நித்யா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்க உள்ளார். இந்நிலையில் D 50’  திரைப்படத்தின் புது அப்டேட் ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் நடிகர் தனுஷ் பதிவிட ரசிகர்கள் தற்பொழுது குஷியில் உள்ளனர். இதோ அந்த பதிவு…

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Dhanush (@dhanushkraja)

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement