LATEST NEWS
5 வருஷம் பதவி இல்லாம இருக்க முடியாதா உங்களால..? திமுக 10 வருஷம் பதவி இல்லாம இருக்கலையா..? விஜயபாஸ்கருக்கு எதிராக கொந்தளித்த அதிமுக தொண்டர்..!!
“5 வருஷம் பதவி இல்லாம இருக்க முடியாதா உங்களால? திமுகவே 10 வருஷம் பதவி இல்லாம இருக்கலையா?” என்று அதிமுக தலைமை அலுவலகமான சென்னை ராயப்பேட்டை எம்.ஜி.ஆர் மாளிகையில், முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு எதிராகக் கட்சித் தொண்டர் ஒருவர் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். அண்மைக் காலமாக அதிமுகவின் முக்கியத் தலைவர்கள் பலர் தவெக மற்றும் பாஜக நோக்கிப் படையெடுத்து வரும் நிலையில், தலைமை அலுவலகத்திற்கு வந்த விஜயபாஸ்கரை முற்றுகையிட்ட தொண்டர்கள், சுயநலத்திற்காகக் கட்சியைப் பலவீனப்படுத்த வேண்டாம் என்று சண்டையிட்டுள்ளனர்.
https://twitter.com/sunnewstamil/status/2072966580842148238/video/1
தோல்விகளைக் கண்டு அஞ்சாமல் கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் தொடர்ந்து களப்பணியாற்றி வரும் நிலையில், பதவிகளை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு மூத்த தலைவர்கள் செயல்படுவது அநீதியானது என்று தொண்டர்கள் கொந்தளித்துள்ளனர். கட்சி இக்கட்டான சூழலில் இருக்கும் போது, தலைமைக்கு அரணாக இருக்க வேண்டிய முன்னாள் அமைச்சர்கள் பலர் தங்களது சுய லாபத்திற்காகக் கட்சி மாறத் துடிப்பதைக் கண்டிக்கவே இந்த ஆவேசப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அதிமுக வட்டாரத்திலும் தமிழக அரசியல் அரங்கிலும் தற்பொழுது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
