LATEST NEWS
அந்த விஷயத்தில் மாமியாரையும் விட்டு வைக்காத சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி…. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்….!!!!
விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் நாட்டுப்புற பாடல்களை பாடி மக்கள் மனதில் இடம் பிடித்தவர்கள் தான் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து இவருக்கு திரை உலகில் பல பாடல்களைப் பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர் சென்றும் தங்களுடைய நாட்டுப்புற பாடல்களை கச்சேரியில் பாடி அசத்தி வருகிறார்கள்.
சமீபத்தில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் இடம் பெற்ற வாயா சாமி என்ற பாடலை தமிழில் ராஜலட்சுமி பாடி அசத்தார். செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி இருவரும் இருளி என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார்கள். இவ்வாறு சினிமாவில் பிஸியாக பலம் வரும் இவர்கள் எப்போதுமே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பது வழக்கம். இந்நிலையில் தற்போது இவர்கள் இருவருமே திரைப்படம் மற்றும் பாடல் கச்சேரிகள் என பிசியாக இருந்து வரும் நிலையில் பெரிய வீடு, ஸ்டூடியோ மற்றும் பங்களா என வளர்ந்து விட்டனர்.
தற்போது ராஜலட்சுமி சைலன்ஸ் என்ற புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் ராதாரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதற்கான பட விழாக்களில் கலந்து கொள்ளும் ராஜலட்சுமி பேட்டி ஒன்றில் தனது மாமியாருக்கு கூட ஒரு யூடியூப் சேனல் ஓபன் செய்திருப்பதாக அவர் கூறியுள்ளார். இதனை அறிந்த நெட்டிசன்கள் பலரும் நீங்கள் இவ்வளவு சம்பாதிக்கும் போது உங்க மாமியாரையும் விட்டு வைக்கலையா என கலாய்த்து வருகிறார்கள்.
