LATEST NEWS
சாலை விபத்தில் எதிர்பாரா மரணம்…. பிரபல சீரியல் நடிகை பரிதாப பலி…. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்….!!!!
மராத்தி மொழி சீரியலில் நடித்து பிரபலமான நடிகை தான் கல்யாணி குராலே ஜாதவ். 32 வயதாகும் இவர் சாலை விபத்தில் திடீரென உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் கோல்ஹாபூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இதனிடையே கடந்த சனிக்கிழமை இரவு 11 மணி அளவில் ஹோட்டலை மூடிவிட்டு இவர் தனது பைக்கில் வீட்டிற்கு சென்றார்.
அப்போது எதிரே வந்த டிராக்டர் மீது இவர் சென்ற பைக் மோதி விபத்துக்குள்ளானதில் இவர் பலத்த காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இவர் உயிரிழந்து விட்டார். இதனைத் தொடர்ந்து டிராக்டர் டிரைவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சாலை விபத்தில் திடீரென நடிகை கல்யாணி உயிரிழந்த சம்பவம் அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
