புத்தாண்டு பார்ட்டிக்கு ஒன்றாக சென்ற ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா…. வைரலாகும் வீடியோ (உள்ளே)….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

புத்தாண்டு பார்ட்டிக்கு ஒன்றாக சென்ற ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா…. வைரலாகும் வீடியோ (உள்ளே)….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் இளைஞர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் மற்றும் புஷ்பா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது இவர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் இவரும் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் காதலித்து வருவதாக சமீப காலமாகவே பல செய்திகள் உலா வந்து. சில மாதங்களுக்கு முன்பு கூட இருவரும் ஜோடியாக மாலத்தீவுக்கு சென்று இருந்த பல புகைப்படங்கள் வெளியானது. இந்நிலையில் புத்தாண்டு பார்ட்டியில் ரஷ்மிகா லைவ் வீடியோவில் வந்து ரசிகர்களுடன் பேசினார். அப்போது வாரிசு உள்ளிட்ட பல விஷயங்களைப் பற்றி கூறியிருந்தார்.

Advertisement

உங்க வயசு என்ன என்று ஒரு ரசிகர் கேட்க அதற்கு 26 என்று ராஷ்மிகா பதில் அளித்தார். அந்த நேரத்தில் அருகில் இருக்கும் ஒரு நபரின் குரல் கேட்கிறது. அது விஜய் தேவரகொண்டாவின் குரல் தான். இதை வைத்து அவர்கள் இருவரும் ஜோடியாக புத்தாண்டு பார்ட்டிக்கு சென்றிருப்பது உறுதியாகியுள்ளது. அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/Bharath__b/status/1609988997304168448

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in