LATEST NEWS
மக்களே உஷார்..! அடுத்த சில மணி நேரங்களில் 7 மாவட்டங்களில் மின்னல் தாக்குதல் அபாயம்..! IMD வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை..!!
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரங்களில் இடி மற்றும் மின்னல் தாக்கும் அபாயம் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், கடலூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் பலத்த இடி, மின்னல் தாக்கும் அபாயம் உள்ளதால், அப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் மிகவும் உஷாராகவும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மின்னல் தாக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதன் தீவிரத்தை உணர்ந்து, இந்த முக்கியமான எச்சரிக்கை செய்தியை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் மற்றவர்களுக்கும் உடனடியாகப் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
