LATEST NEWS
BREAKING: தாராபுரத்தில் சத்தியபாமா வெற்றி… கொண்டாட்டத்தில் தொண்டர்கள்..!!
தாராபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சத்தியபாமா வெற்றி பெற்றுள்ளார். 19-வது சுற்று வாக்கு எண்ணிக்கையின் நிலவரப்படி, தவெக வேட்பாளர் சத்தியபாமா 60,078 வாக்குகளும், திமுக வேட்பாளர் சுகன்யா 50,075 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பானுமதி 38,760 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
இன்னும் எண்ணப்பட வேண்டிய வாக்குகளின் எண்ணிக்கையை விட சத்தியபாமா சுமார் 10,000 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளதால், அவர் தனது வெற்றியைத் தெளிவாக உறுதி செய்துள்ளார். இந்தத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, தவெக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பட்டாசுகளை வெடித்துப் பெரும் உற்சாகத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
