கோலாகலமாக நடந்த சீரியல் நடிகை காயத்ரியின் வளைகாப்பு விழா.. ஒன்று கூடிய சீரியல் பிரபலங்கள்.. வெளியான அழகிய புகைப்படங்கள்..!! - Cinefeeds
Connect with us

CINEMA

கோலாகலமாக நடந்த சீரியல் நடிகை காயத்ரியின் வளைகாப்பு விழா.. ஒன்று கூடிய சீரியல் பிரபலங்கள்.. வெளியான அழகிய புகைப்படங்கள்..!!

Published

on

சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை காயத்ரி யுவராஜ்.

இவர் பார்ப்பதற்கு ஹீரோயினி போல இருந்தாலும் சீரியல்களில் வில்லியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

இவர் நடனத்தின் மீது அதிக காதல் கொண்டிருந்ததால் நடன இயக்குனர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரில் ஹீரோவாக நடித்த கதாபாத்திரத்திற்கு தங்கையாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.

அது மட்டுமல்லாமல் தற்போதும் பல சீரியல்களில் நடித்து வருகிறார். அவ்வகையில் மெல்லத் திறந்தது கதவு,மோகினி களத்து வீடு போன்ற தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர்.

இதனிடையே காயத்ரி யுவராஜ் தம்பதிக்கு ஏற்கனவே ஒரு மகன் உள்ள நிலையில்  காயத்ரி இரண்டாவது முறையாக தற்போது கர்ப்பமாகியுள்ளார்.

அந்தச் செய்தியை அவர் மகிழ்ச்சியுடன் வெளியிட்டிருந்த நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் காயத்ரி யுவராஜுக்கு நேற்று வளைகாப்பு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்று உள்ளது.

அவரின் வளைகாப்பு விழாவில் சீரியல் நடிகைகள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்த நிலையில் தற்போது அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.