“அப்போ காதல் கன்ஃபார்ம் தானா?”….. பிக்பாஸ் பிரபலத்துடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஷிவானி…. வைரல்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அப்போ காதல் கன்ஃபார்ம் தானா?”….. பிக்பாஸ் பிரபலத்துடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஷிவானி…. வைரல்….!!!!

Published

on

தமிழ் சினிமாவின் தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஷிவானி நாராயணன். சின்னத்திரை சீரியல்கள் மூலம் பிரபலமான இவர் காதல் சர்ச்சையில் சிக்கியதால் திடீரென சீரியலில் இருந்து விலகினார். அதன் பிறகு விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இவருக்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவாக்கியது.பின்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தவுடன் பல சீரியல்களில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் பெரிய நடிகரின் படத்தில் தான் நடிக்க வேண்டும் என காத்திருந்தார்.

அவ்வகையில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்து அசத்தியிருந்தார். இவரின் முதல் படமே நல்ல வெற்றியை கொடுத்த நிலையில் இவருக்கு அடுத்த சில பட வாய்ப்புகளும் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.இதனிடையே எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானி அவ்வபோது தனது ஹாட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவது வழக்கம்.

Advertisement

இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலாஜி முருகதாஸ் மற்றும் சிவானி இருவரும் தற்போது ஜோடியாக வலம் வருகிறார்கள். ஆனால் காதலிக்கிறார்களா இல்லையா என்பது மட்டும் உறுதியாக தெரியவில்லை. இந்நிலையில் பாலாஜி முருகதாஸ் உடன் இருக்கும் சில புகைப்படங்களை ஷிவானி இணையத்தில் பகிர்ந்து உள்ளார். பாலாஜி முருகதாஸ் பிறந்தநாள் என்பதால் தான் அந்த பதிவை அவர் பகிர்ந்து உள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அப்போ காதல் கன்ஃபார்ம் தானா என கமெண்ட் செய்து புகைப்படத்தை வைரல் ஆகி வருகிறார்கள்.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Shivani Narayanan இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@shivani_narayanan)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in