LATEST NEWS
அய்யோ கொடுமையே..! திருவிழாவில் கோரத் தாண்டவம்.. ஸ்கார்பியோ காரால் அலறி அடித்து ஓடிய மக்கள்… வைரலாகும் பகீர் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் நடைபெற்ற திருவிழா ஒன்றில் ஸ்கார்பியோ கார் ஒன்றை ஆபத்தான முறையில் ஓட்டி சாகசங்களில் ஈடுபட்டதால் பெரும் பீதியும் பரபரப்பும் ஏற்பட்டது. இந்த வேகமான காரின் காரணமாகக் கூட்டத்திற்குள் இருந்த பலர் மீது வாகனம் மோதியதுடன், பலர் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்தின்போது நிகழ்விடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தால் திருவிழாவில் கடுமையான குழப்பமும் கலவரமும் ஏற்பட்டது. காரின் ஓட்டுநர் கட்டுப்பாட்டை மீறி வேகமாக வந்ததால், அங்கிருந்த ஆண்களும் பெண்களும் தங்களது குழந்தைகளை கைகளில் ஏந்தியவாறு அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். பாதுகாப்புக்காக அங்கு நின்றிருந்த காவல்துறை அதிகாரிகளும் காரை நிறுத்த முயன்ற காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன.
இந்த விபத்தில் ஸ்கார்பியோ கார் மோதியதில் பலரும் காயமடைந்தனர்; அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சளுக்காக கொண்டு செல்லப்பட்டனர். எனினும், காயமடைந்தவர்களின் சரியான எண்ணிக்கை மற்றும் அவர்களின் உடல்நிலை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இதற்கிடையே, காவல்துறையினர் இந்தச் சம்பவத்தை தீவிரமாகக் கையில் எடுத்துள்ளனர்; சம்மந்தப்பட்ட வாகனத்தை அடையாளம் கண்டு, அதன் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் தொடங்கியுள்ளனர்.
