LATEST NEWS
திடீரென திருமண புகைப்படத்தை டெலிட் செய்த சுப்பிரமணியபுரம் பட நடிகை சுவாதி… இதுதான் காரணமா?.. வெளியான அதிர்ச்சி தகவல்..!!
தமிழ் சினிமாவின் சுப்பிரமணியபுரம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை சுவாதி ரெட்டி. அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து வடகறி மற்றும் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் தன்னுடைய 17 வயதில் கலர்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
முதல் வருட கல்லூரி வாழ்க்கையை முடித்த போது சினிமாவில் அறிமுகமானார். டேஞ்சர் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவருக்கு தமிழில் வாய்ப்பு கிடைத்தது. இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் பின்னணி பாடகி ஆகவும் திகழ்கிறார். ஒரு சில பாடல்களையும் பாடியுள்ளார்.
இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு மலேசியன் ஏர்லைன்சை சேர்ந்த விமான ஓட்டி விகாஸ் வாசு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தனது சமூக வலைத்தள பக்கத்தில்கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு இருந்த சுவாதி திடீரென அந்த புகைப்படங்களை தற்போது டெலிட் செய்துள்ளார்.
கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாகவும் இதனால் திருமண புகைப்படத்தை அவர் டெலிட் செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
