CINEMA
அட்ரா சக்க… தொடங்கியது சூப்பர் ஸ்டாரின் ‘லால் சலாம்’ டப்பிங்… மொஹிதீன் பாய் coming soon…

சூப்பர் ஸ்டாரின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கத்தில், லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கும் திரைப்படம் ‘லால் ஸலாம்’. இந்தப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் இணைந்து கதாநாயகர்களாக நடிக்கின்றனர். ‘ லால் சலாம்’ என பெயரிட்டுள்ள இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்கிறார்.
மேலும் கலை இயக்குனராக ராமு தங்கராஜ் மற்றும் படத்தொகுப்பாளராக B.பிரவீண் பாஸ்கர் ஆகியோர் இந்த படத்தில் பணியாற்ற உள்ளனர். இத்திரைப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளார். இத்திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் காட்சிகள் அவ்வப்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தற்பொழுது படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் நிறைவு பெற்றுள்ளது.
இத்திரைப்படத்தில் மொஹிதீன் பாயாக சூப்பர் ஸ்டார் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் தனது டப்பிங் பணிகளை தொடங்கி உள்ளார். ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் லால் ஸலாம் திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். தற்பொழுது இந்த விடியோவானது இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதோ அந்த வைரல் வீடியோ…
View this post on Instagram