LATEST NEWS
என்னது பிக் பாஸ் ஷிவானிக்கு surgery-ஆ..? என்னாச்சு உங்களுக்கு..? வலியுடன் அவரே வெளியிட்ட வீடியோ..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பகல் நிலவு’ சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஷிவானி நாராயணன். தொடர்ந்து அவர் கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா போன்ற சீரியல்களில் ஹீரோயினாக நடித்தார். சீரியல்களில் கிடைத்த பிரபலம் மூலமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற சவானிக்கு முதலில் மக்கள் மத்தியில் எதிர்ப்பே இருந்தது.
ஆனால் வெளியில் வரும் பொழுது அவர் அதிகமான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை ஷிவானி இவர் அவ்வப்போது எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டான்ஸ் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளது.
அதன்படி ‘விக்ரம்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தில் கிளாமருக்கு குறை வைக்காமல் நடித்துள்ளார்.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை ஷிவானி. இவர் கடந்த வாரம் wisdom tooth removal surgery செய்து கொண்டுள்ளார். இதனால் வலியுடன் காணப்படும் அவருக்கு அவரது அம்மா உணவை ஊட்டிவிட்டு மாத்திரைகளை எடுத்துக் கொடுக்கிறார். வலியுடன் அமர்ந்திருக்கும் ஷிவானி வெளியிட்ட வீடியோவானது தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…
View this post on Instagram