2023 சைமா விருது வழங்கும் விழா… ஹாலிவுட் நடிகைகள் போல ஜொலித்த பிரபல நடிகைகள்… இரண்டு பேருமே அவ்ளோ அழகு!… - Cinefeeds
Connect with us

CINEMA

2023 சைமா விருது வழங்கும் விழா… ஹாலிவுட் நடிகைகள் போல ஜொலித்த பிரபல நடிகைகள்…  இரண்டு பேருமே அவ்ளோ அழகு!…

Published

on

சைமா எனப்படும் தென்னிந்திய சர்வதேச திரைப்படம் விருது விழா நிகழ்ச்சி வருடந்தோறும் நடைபெற்று வருகிறது. தென்னிந்திய திரைக் கலைஞர்களை கெளரவிக்கும் வகையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி தற்பொழுது வரை 11 ஆண்டுகளை கடந்துள்ளது. 11வது சைமா விருது விழா நேற்று செப்டம்பர் 15 ஆம் தேதி துபாயில் தொடங்கி செப்டம்பர் 16 நேற்று வரை நடைபெற்றது.

இந்த விழாவில் பல்வேறு தென்னிந்திய பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் முதல் நாளில் வளர்ந்து வரும் இளம் நடிகர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோர் கெளரவிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களுக்கான விருதுகளும் வழங்கப்பட்டன.சிறந்த தெலுங்கு நடிகருக்கான விருதை ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்த ஜூனியர் என்.டி.ஆர் வென்றார்.

சிறந்த அறிமுக நடிகைக்கான விருதையும், சிறந்த கதாநாயகிக்கான விருதையும் சீதா ராமம் படத்தில் நடித்த மிருணாள் தாக்கூர் வென்றார். இப்படி பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு திரைக்கலைஞர்கள் கெளரவிக்கப்பட்டனர். இந்த விழாவில் பல்வேறு நடிகர்கள் மற்றும் நடிகைகள் கலந்து கொண்டு விருதை பெற்றனர். தற்பொழுது  சைமா விருது வழங்கும் விழாவில் ஹாலிவுட் நடிகைகள் போல உடையணிந்து கலந்து கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் த்ரிஷாவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்….