19 வருடங்களுக்கு ரீ ரிலீசாகும் 7ஜி ரெயின்போ காலனி… ஆளே அடையாளம் தெரியாமல் மாறியுள்ள ஹீரோ & சக நடிகர்கள்.. - Cinefeeds
Connect with us

CINEMA

19 வருடங்களுக்கு ரீ ரிலீசாகும் 7ஜி ரெயின்போ காலனி… ஆளே அடையாளம் தெரியாமல் மாறியுள்ள ஹீரோ & சக நடிகர்கள்..

Published

on

இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் திரைப்படங்களில் 2004ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் 7ஜி ரெயின்போ காலனி. இந்தப் படத்தில் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனி, தமிழில் வெளியான கிளாஸிக்கல் திரைப்படங்களில் ஒன்றாக ரசிகர்களால் பார்க்கப்படுகிறது. யுவனின் பாடல்களுடன் படமும் சூப்பர் ஹிட் அடித்தது. தமிழில் 7ஜி ரெயின்போ காலனி என்ற பெயரிலும், தெலுங்கில் 7ஜி பிருந்தாவன் காலனியாகவும் இந்தப் படம் வெளியானது.

இரண்டு மொழிகளிலும் மிகப் பெரிய வெற்றிப் பெற்ற இந்தப் படம், இப்போதும் ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்ட்டில் உள்ளது. இயக்குனர் செல்வராகவன் தற்போது 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளார். இதிலும் ரவி கிருஷ்ணா தான் ஹீரோவாக நடிக்கிறார். ஆனால், நாயகியாக சோனியா அகர்வால் நடிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

செல்வராகவனும் சோனியா அகர்வாலும் காதலித்து 2006ம் ஆண்டில் திருமணம் செய்து 4 ஆண்டுகளில் இருவருமே விவாகரத்துப் பெற்று பிரிந்தனர். சோனியா அகர்வாலை பிரிந்த அடுத்த ஆண்டிலேயே கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்துகொண்டார் செல்வராகவன். ஆனால், சோனியா அகர்வாலோ இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. இந்நிலையில், 7ஜி ரெயின்போ காலனி படத்தின் தெலுங்கு வெர்ஷனான 7ஜி பிருந்தாவன் காலனிவரும் செப்டம்பர் 22ம் தேதி ரீ-ரிலீஸாகிறது.

தற்பொழுது இத்திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் திரைபடத்தில் நடித்த நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். இதில் சோனியா அகர்வால் அவ்வளவாக மாற்றம் அடையவில்லை ஆனால் இத்திரைப்படத்தின் ஹீரோவாக நடிகர் ரவிரிஷ்ணா  ஆள் அடையாளமே தெரியாமல் மாறிபோயுள்ளார். இதோ அந்த புகைப்படம்…

 

View this post on Instagram

 

A post shared by South Times (@southtimes)