“13 மாதங்கள் சங்கிலியால் பூட்டி..” சொந்த மகளுக்கு நேர்ந்த கொடூரம்.. பெற்ற தந்தையின் வெறி.. கதி கலங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“13 மாதங்கள் சங்கிலியால் பூட்டி..” சொந்த மகளுக்கு நேர்ந்த கொடூரம்.. பெற்ற தந்தையின் வெறி.. கதி கலங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

எகிப்தின் கெனா மாகாணத்தில் உள்ள கசாம் கிராமத்தில், தன் சொந்த மகளையே 13 மாதங்கள் சங்கிலியால் பிணைத்து, பட்டினி போட்டுக்கொன்ற தந்தையின் மீதான வழக்கு நவம்பர் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. “கெனாவின் மணமகள்” என்று அழைக்கப்படும் சாரா ஹம்டி என்ற இளம் பெண், அவரது தந்தையால் ஒரு அறைக்குள் சிறைவைக்கப்பட்டு, உணவு மற்றும் தண்ணீர் இன்றி கொடூரமாகக் சித்திரவதை செய்யப்பட்டார். நீண்ட நாட்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் வெறும் எலும்புக்கூடாக மாறிய அந்தப் பெண், இந்த ஆண்டு ஜனவரி மாதம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தக் கொடூரக் கொலை வழக்கினை விசாரித்து வரும் கெனா குற்றவியல் நீதிமன்றம், வழக்கின் முக்கிய சாட்சிகளிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்வதற்காக, விசாரணையை அடுத்த மாதம் நவம்பர் 2-ஆம் தேதி நடக்கும் அமர்வுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் நிகழ்ந்த இந்த அதிர்ச்சி சம்பவத்தில், காவல்துறையினர் குற்றவாளியான தந்தையைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து, தற்பொழுது இந்த வழக்கின் நீதிமன்ற நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in