CRIME
“அய்யோ என் புள்ள..” 5 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்.. போதை ஏறியதும் மிருகமாக மாறிய தந்தை.. அதிகாலையில் கதறிய தாய்.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தின் போரபண்டா ஷில்பாநகர் பகுதியில், குடிபோதையில் இருந்த தந்தை ஒருவர் தனது 5 வயது மகனைக் கொடூரமான முறையில் கழுத்தை நெரித்துக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. வித்யாசாகர் (36) என்ற நபர் நேற்று இரவு 10 மணியளவில் கடுமையான மது போதையில் தனது மகன் விஜய்யை பலவந்தமாகக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். இந்த விபரீதம் நடந்த சமயத்தில் சிறுவனின் தாய் துர்கா, குடும்பப் பிழைப்பிற்காகக் கேட்டரிங் வேலைக்குச் சென்றிருந்தார்.
மறுநாள் அதிகாலை வேலை முடிந்து துர்கா வீட்டிற்குத் திரும்பிய போது, தனது மகன் பிணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதுள்ளார். இச்சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, போலீசாருக்கும் விபரம் எட்டியுள்ளது. காவல்துறைக்குத் தகவல் தெரிந்தவுடன், குற்றவாளியான தந்தை வித்யாசாகர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிவிட்டார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போரபண்டா போலீஸார், சிறுவனின் உடலைக் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய வித்யாசாகரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
