VIDEOS
கோலாகலமாக தொடங்கிய திருமண கொண்டாட்டம்…. கணவருடன் டான்ஸ் ஆடிய நடிகை ஹன்சிகா…. வைரலாகும் வீடியோ….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக பலம் வந்து கொண்டிருப்பவர் சின்ன குஷ்பூ என்று பெயரை பெற்றுள்ள நடிகை ஹன்சிகா. இவர் முதலில் நடிக்க வந்தபோது கொழுக் முழுக் என்று இருந்ததால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். ஆரம்பத்தில் முன்னணி நடிகையாக பலம் வந்த இவர் ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் இல்லாமல் திணறினார். இவர் குண்டாக இருக்கிறார் இவருக்கு சரியாக நடிப்பு வரவில்லை என்று பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இதனிடையே விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு ஹன்சிகா உடல் எடையை குறைத்த நிலையில் அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இதனிடையே ஹன்சிகா தொழிலதிபர் ஒருவருக்கு இரண்டாம் தாரமாக திருமணம் செய்ய உள்ளார். அதாவது அவரை நெருங்கிய தோழியின் கணவரான அவர் சமீபத்தில் முதல் மனைவியை விவாகரத்து செய்து தற்போது ஹன்சிகாவை இரண்டாவதாக திருமணம் செய்ய உள்ளார்.
இவர்களின் திருமணம் ஜெய்ப்பூர் அரண்மனையில் மிகக் கோலாகலமாக நடைபெறும் நிலையில் திருமண கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளது. அண்மையில் மெஹந்தி பங்க்ஷன் வீடியோ வைரலாகிய நிலையில் தற்போது ஹன்சிகாவின் திருமண கொண்டாட்டமும் தொடங்கியுள்ளது. அவ்வகையில் மாப்பிள்ளை உடன் ஹன்சிகா டான்ஸ் ஆடி இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
https://youtu.be/E8p_iLhbAEU
