LATEST NEWS
மகன்களுடன் முதல் பிறந்த நாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்.. கட்டிப்பிடித்து முத்தம் மழை பொழிந்த நயன்தாரா.. வெளியான புகைப்படங்கள்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவர் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் ஜோடி போட்டு நடித்துள்ளார்.
லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். இவர் தற்போது ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இவர் கடந்த வருடம் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக அறிவித்தனர்.
இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் பல கட்ட விசாரணைகளுக்குப் பிறகு கடந்த 2016 ஆம் ஆண்டு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் அதன் பிறகு முறைப்படி வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதாகவும் விளக்கம் அளித்தனர்.
இதனை தொடர்ந்து இந்த பிரச்சனை முடிவுக்கு வந்த நிலையில் தங்கள் குழந்தைகளுக்கு உயிர் மற்றும் உலக் என பெயரிட்டு இருப்பதாக விக்னேஷ் சிவன் கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து சமீபத்தில் ஒரு விருது விழாவில் கலந்து கொண்ட நயன்தாரா தனது மகன்களின் முழு பெயரை அறிவித்தார் . அதாவது உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன் என தனது இரண்டு மகன்களின் பெயரையும் அறிவித்தார் .
இதனைத் தொடர்ந்து மகன்கள் பிறந்தது முதல் சிறு விசேஷங்கள் வீட்டில் நடைபெறுவதை புகைப்படங்களாக வெளியிட்டு வந்த நிலையில் சமீபத்தில் instagram பக்கத்தை தொடங்கி நயன்தாரா தனது மகன்களின் புகைப்படத்தை வெளியிட்டார்.
இந்த நிலையில் விக்னேஷ் சிவன் ஏற்று தனது பிறந்த நாளை தனது மகன்கள் மற்றும் மனைவியுடன் கொண்டாடிய நிலையில் அது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வர ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.