LATEST NEWS
எல்லாத்துக்கும் ஓகே அந்த ஒன்னு மட்டும் வேணாம்.. நடிகை பிரியாமணியின் பளிச் பதிலால் ரசிகர்கள் ஷாக்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்தவர் தான் நடிகை பிரியாமணி. இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் திரைப்படத்தின் முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருது வாங்கினார். பிரியாமணி என்கின்ற ப்ரியா வாசுதேவ் மணி ஐயர் தேசிய விருது பெற்ற இந்திய திரைப்பட நடிகை மற்றும் வடிவழகி என பல புகழுக்குரியவர். இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
இவருக்கு பட வாய்ப்புகள் திடீரென குறைந்த நிலையில் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்து வருகிறார். இந்நிலையில் ஹரிஹரா பிக்சர்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில் கன்னட மற்றும் தமிழ் மொழிகளில் நேரடியாகவும் தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் டப்பிங் செய்தும் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள DR 56 என்ற திரைப்படத்தில் பிரவீன் ரெட்டி நாயகனாக நடிக்க பிரியாமணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.
இதனிடையே பிரியாமணி எப்போதும் திரைப்படங்களில் கிளாமரில் எல்லை மீறியது கிடையாது. குறிப்பாக முத்த காட்சிகளில் நடிக்கவே மாட்டேன் என கண்டிஷன் போட்டு தான் படங்களில் நடித்து வருகிறார். முத்த காட்சி மற்றும் படுக்கை அறை காட்சிகளில் ஏன் நடிப்பதில்லை என்பதற்கான காரணத்தை அவர் தற்போது கூறியுள்ளார். நான் நடிக்கும் திரைப்படங்களை எனது கணவர் மற்றும் குடும்பத்தினர் என அனைவரும் பார்ப்பார்கள்.
அவர்கள் முகம் சுளிக்க வைக்கும் அளவுக்கு இருக்கக் கூடாது என்று தான் நான் அந்த மாதிரி காட்சிகளில் நடிப்பது கிடையாது. மேலும் மற்றொரு ஆணுடன் கிஸ் செய்ய எனக்கு விருப்பம் கிடையாது. என்னுடைய கணவருக்கு நான் பதில் சொல்ல வேண்டும் என்று ப்ரியாமணி வெளிப்படையாக கூறியுள்ளார்.அது மட்டுமல்லாமல் இது என் பக்கத்தில் இருந்து ஒரு பொறுப்பு என்று நான் நினைக்கிறேன் அப்படிப்பட்ட காட்சிகள் வந்தால் தனக்கு வசதி இல்லை என்று வெளிப்படையாக சொல்வதில் தப்பு கிடையாது. கன்னத்தில் முத்தமிடுவதைத் தாண்டி இது போன்ற எந்த காட்சியிலும் தனக்கு வசதியாக இல்லை என்று பிரியாமணி வெளிப்படையாக கூறியுள்ளார்.