அத்து மீறி தொட்ட உதவி இயக்குனர்.. 6 மாசத்துல அப்படி நடந்துருச்சு.. முதல் முறையாக மனம் திறந்த பிரபல நடிகை..!! - Cinefeeds
Connect with us

CINEMA

அத்து மீறி தொட்ட உதவி இயக்குனர்.. 6 மாசத்துல அப்படி நடந்துருச்சு.. முதல் முறையாக மனம் திறந்த பிரபல நடிகை..!!

Published

on

J. Lalitha: தெலுங்கு திரை உலகில் எண்பது மற்றும் 90களில் முன்னணி கவர்ச்சி நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை ஜெ.லலிதா.

இவர் தெலுங்கு மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் இந்தி என 650 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் டிவி சீரியல்களிலும் குணச்சித்திர நடிகையாக நடித்து வருகின்றார். இந்த நிலையில் இவர் சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தன்னுடைய சினிமா பயணத்தில் நடந்த ஒரு கசப்பான அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அதாவது நடிக்க வந்த புதிதில் தனக்கு கவர்ச்சி கதாபாத்திரங்கள் கிடைத்ததால் குடும்ப கஷ்டம் காரணமாக அதனை ஏற்று நடித்தேன்.

எல்லா துறைகளைப் போலவும் சினிமாவிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் இருக்கின்றன. நான் முதலில் ஒரு மலையாள திரைப்படத்தில் நடிப்பதற்காக சென்றபோது அதன் உதவி இயக்குனர் என்னிடம் பேச்சு கொடுத்து படத்தில் உள்ள ஒரு கற்பழிப்பு காட்சியைப் பற்றி விவரித்து கூற வேண்டும் என்று கூறி ஒரு அறைக்கு என்னை அழைத்துச் சென்றார். அங்கு அவர் என்னிடம் அத்துமீறி நடந்து கொண்ட நிலையில் அந்த உதவி இயக்குனர் அடுத்த ஆறு மாதங்களில் இறந்து விட்டார்.

என்னுடைய மனதை புண்படுத்தினால் இப்படித்தான் நடக்கும் என்று நான் நினைத்துக் கொண்டேன். எனக்கு நடந்த சம்பவம் தான் சினிமாவிலும் பாலியல் தொல்லை இருப்பதற்கு உண்மையான சாட்சி. இதனை தற்போது கூறுவதில் எனக்கு எந்த ஒரு தயக்கமும் கிடையாது என்று அவர் வெளிப்படையாக கூறியுள்ளார்.