“அட..! இத்தனை நாளா இது தெரியாம போச்சே..”ரெயில் டிக்கெட்டில் 10 இலக்கங்கள் ஏன் இருக்கிறது தெரியுமா..?! யாரும் சொல்லாத PNR ரகசியம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அட..! இத்தனை நாளா இது தெரியாம போச்சே..”ரெயில் டிக்கெட்டில் 10 இலக்கங்கள் ஏன் இருக்கிறது தெரியுமா..?! யாரும் சொல்லாத PNR ரகசியம்..!!

Published

on

ரெயில்களில் கோடிக்கணக்கான மக்கள் தினசரி பயணம் செய்கின்றனர். குறைந்த கட்டணம், நிறைவான பயணம் என்ற வகையில் பயணிகளுக்கு நன்மை பயப்பதுடன், நீண்டதூர பயணத்திற்கு ஏற்ப படுக்கை வசதி, குளிர் சாதன வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் கிடைக்கின்றன. இந்த பயணத்திற்கு தேவையான ரெயில் டிக்கெட்டில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, அதில் 10 இலக்க பி.என்.ஆர். எண்ணை பார்த்திருப்போம். அதன் உண்மையான அர்த்தம் மற்றும் பின்னணி பற்றி இதில் தெரிந்து கொள்வோம்.

பி.என்.ஆர். என்பது ‘பாசஞ்சர் நேம் ரெக்கார்டு’ என்பதன் சுருக்கம் ஆகும். ஒவ்வொரு முன்பதிவையும் தனித்தனியாக அடையாளம் காண உதவும் எண் இது. இந்த எண்ணுடன் இணைக்கப்பட்ட பதிவில் பயணிகளின் பெயர், பயணத்தேதி, ரெயில் எண், முன்பதிவு நிலை உள்ளிட்ட விவரங்கள் இருக்கும். இது உங்கள் ரெயில் பயண முன்பதிவை அடையாளம் காண உதவும் தனித்துவமான எண்ணாகும்.

Advertisement

இந்திய ரெயில்வேயில் தினமும் ஏராளமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன. இவற்றை தனித்தனியாக அடையாளம் கண்டு, விரைவாக கையாள 10 இலக்க பி.என்.ஆர். எண் உதவுகிறது. இதில் முதல் 3 இலக்கங்கள், டிக்கெட் எந்த பயணியர் முன்பதிவு முறைமை மூலம் பதிவு செய்யப்பட்டது என்பதை குறிக்கின்றன. மீதமுள்ள 7 இலக்கங்கள், அந்த முன்பதிவுக்கான தனித்துவமான அடையாளத்தை உருவாக்க உதவுகின்றன. உங்கள் டிக்கெட் உறுதி செய்யப்பட்டுள்ளதா, காத்திருப்போர் பட்டியலில் உள்ளதா போன்ற விவரங்களை இந்த எண்ணைப் பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in