LATEST NEWS
“ஆதாரம் இல்லாம பேசாதீங்க.. எனக்கு எந்த அரசியல்வாதியையும் தெரியாது..” கே.என். நேரு வழக்கில் கொந்தளித்த நடிகை ஜனனி..!!
அமைச்சர் கே.என். நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் தனக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்று நடிகை ஜனனி அசோக்குமார் தெளிவாக தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் கே.என். நேருவுக்கு தொடர்புடையவர்கள் மூலம் ஜனனிக்கு பணப் பரிவர்த்தனை நடந்ததாகத் தகவல்கள் பரவிய நிலையில், அதற்குப் பதிலளிக்கும் வகையில் அவர் தனது விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
தனது அறிக்கையில், எனக்கு எந்தவொரு அரசியல் பிரபலங்களுடனும் எவ்வித நட்பும் கிடையாது என்று கூறியுள்ள ஜனனி, எவ்வித ஆதாரமும் இன்றி தன் மீது தவறான அவதூறுகளைப் பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
