LATEST NEWS
“உங்கள நீங்களே சஸ்பெண்ட் பண்ணிக்கோங்க..!” முதலமைச்சரை நேரடியாக வம்புக்கு இழுத்த எதிர்க்கட்சித் தலைவர்.. தமிழக அரசியலில் பரபரப்பு..!!
தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக சிறைகளில் இருந்து கைதிகள் அடுத்தடுத்து தப்பிச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டி, தமிழக அரசை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். ‘மெத்’ அரசின் மெத்தனப் போக்கால் தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பு இன்று பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், புழல் மற்றும் தேனி மாவட்டச் சிறைகளைத் தொடர்ந்து, தற்போது கோவை மத்தியச் சிறையிலிருந்தும் கைதி தப்பியோடியுள்ளதைச் சாடினார். மேலும், கைதிகள் தங்களுக்குள் ‘இன்கி பிங்கி பாங்கி’ போட்டு, அடுத்து பாளையம்கோட்டையா அல்லது சேலமா எனத் தேர்ந்தெடுத்துத் தப்பிச் செல்லும் அளவிற்கு ஒரு ‘டம்மி CM’-இன் ஆட்சி லட்சணம் சீரழிந்து போயுள்ளது என்று தனது பதிவில் மிகக் கடுமையான வார்த்தைகளால் பதிவிட்டுள்ளார்.
தொடர்ச்சியாக அரங்கேறி வரும் இத்தகைய சிறைப்பாதுகாப்பு அத்துமீறல்களுக்குத் துறை சார்ந்த கீழ்நிலை அதிகாரிகளை மட்டும் பலிகடா ஆக்குவதை அவர் கடுமையாக எதிர்த்துள்ளார். இனிமேல் இந்த விவகாரத்தில் யாரையாவது பணியிடமாற்றம் செய்யவோ அல்லது சஸ்பெண்ட் செய்யவோ வேண்டும் என்றால், இந்த நிர்வாகச் சீர்கேட்டிற்குப் பொறுப்பேற்று முதலமைச்சர் தன்னைத் தானே தான் செய்து கொள்ள வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கும், சிறை நிர்வாகமும் முற்றிலுமாக முடங்கியுள்ளதை வெளிச்சம்போட்டுக் காட்டும் வகையில் இந்த விமர்சனம் அமைந்துள்ளது.
