“ஏழைங்கன்னா என்ன கேவலமா..?” வறுமையைச் சுட்டிக்காட்டி நடந்த கொடுமை.. நீதி கிடைக்காமல் பறிபோன உயிர்..! கதறும் குடும்பம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஏழைங்கன்னா என்ன கேவலமா..?” வறுமையைச் சுட்டிக்காட்டி நடந்த கொடுமை.. நீதி கிடைக்காமல் பறிபோன உயிர்..! கதறும் குடும்பம்..!!

Published

on

டெல்லியின் கல்யான்புரி பகுதியில் பிளிப்கார்ட் நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலை செய்து வந்த சமீர் உசேன் என்பவரின் மரணம் பல தீவிர கேள்விகளை எழுப்பியுள்ளது. ஒரு டெலிவரியின் போது 10 ரூபாய் கிழிந்த நோட்டு தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சமீர் தாக்கப்பட்டதோடு அவரது வறுமையை சுட்டிக்காட்டி அவமானப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த அவர், கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடன்பிறந்தவர்கள் அவரை மீட்டு எல்.பி.எஸ் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

குடும்பத்தினரின் கூற்றுப்படி, இந்தச் சம்பவத்திற்கு முன்பே சமீர் பிளிப்கார்ட் அலுவலகத்தில் தனது மேலாளரிடம் புகார் அளித்துள்ளார், ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதன்பிறகு அவர் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தும் அங்கு நீதி கிடைக்கவில்லை. இந்த விஷயம் அவரது சுயமரியாதையை கடுமையாகப் பாதித்தது. இந்நிலையில், குடும்பத்தினர் இந்தச் சம்பவம் தொடர்பாக உள்ளாட்சி கவுன்சிலரின் உறவினர்கள் மீது புகார் அளித்துள்ளனர் மற்றும் மருத்துவமனை சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட முழுமையான நியாயமான விசாரணையை கோரியுள்ளனர்.

Advertisement

மருத்துவமனையில் சிகிச்சையின் போது சமீர் பூரண நலமடைந்து வருவதாகக் குடும்பத்தினர் தெரிவித்தாலும், இதற்கிடையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஐசியூவிற்குள் சென்று சமீர்மைச் சந்தித்ததாகவும், அதன் பிறகே அவரது மரணம் நிகழ்ந்ததாகவும் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். இந்த மரதிற்கான உண்மையான காரணத்தை வெளிக்கொண்டுவரவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் ஐசியூ சிசிடிவி காட்சிகளைப் பொதும வெளியிடுமாறு குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in