“நீ  மலடியாகி விதவையா போவ…” பெண்ணை சாபம் விட்ட பூசாரி..! கொதித்தெழுந்த இளைஞர் செய்த அதிர்ச்சி காரியம்.. நடுரோட்டில் அரங்கேறிய பகீர் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“நீ  மலடியாகி விதவையா போவ…” பெண்ணை சாபம் விட்ட பூசாரி..! கொதித்தெழுந்த இளைஞர் செய்த அதிர்ச்சி காரியம்.. நடுரோட்டில் அரங்கேறிய பகீர் சம்பவம்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு கோயிலில், பூசாரி ஒருவர் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணை “மலட்டுத் தன்மையடைந்தவளாகவும், விதவை ஆகவும் போய்விடுவாய்” என்று சாபம் விட்டதாகக் கூறப்படும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் வீட்டிற்குச் சென்று நடந்த விவரங்களைத் தன் குடும்பத்தினரிடம் தெரிவித்ததும், ஆத்திரமடைந்த ஒரு இளைஞர் உடனடியாக கோயிலுக்குச் சென்று பூசாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கிரேட்டர் நொய்டாவில் உள்ள ரபுபுரா கொத்துவால் பகுதிக்குட்பட்ட ஷாபூர் நிலௌனி கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கோயிலுக்குச் சென்றிருந்தபோது, அங்கே பூசாரி தமக்குச் சாபம் விட்டதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டிற்குத் திரும்பிய அந்தப் பெண் தன் குடும்பத்தினரிடம் இதைக் கூறவே, ராஜேஷ் என்ற இளைஞர் கடும் கோபத்துடன் நேராகக் கோயிலுக்குச் சென்றார். அங்கு பூசாரியிடம் இது குறித்துக் கேள்வி எழுப்பியபோது இருவருக்கும் இடையே வாக்குவாதமும், கடுமையான வசவுகளும் வெடித்தது. ஆத்திரமடைந்த ராஜேஷ் பூசாரியைத் தரையில் தள்ளித் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

Advertisement

இந்தச் சம்பவத்தின்போது அருகில் இருந்தவர்கள் உடனடியாகத் தலையிட்டுப் பூசாரியை மீட்டுள்ளனர். இந்தத் தாக்குதல் தொடர்பான முழு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, ரபுபுரா கொத்துவால் காவல் நிலைய போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றம் சாட்டப்பட்ட ராஜேஷைக் கைது செய்தனர். கொத்துவால் பொறுப்பாளர் ஷியாம் பாபு சுக்லா, கோயில் பூசாரி தாக்கப்பட்டது தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்ட நபரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாகவும், தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in