நிச்சயதார்த்தம் செய்துகொண்ட நடிகர் ஆதி..! பிரபல நடிகையை மணக்கிறார்..! யார் அந்த நடிகை தெரியுமா..? – cinefeeds
Connect with us

LATEST NEWS

நிச்சயதார்த்தம் செய்துகொண்ட நடிகர் ஆதி..! பிரபல நடிகையை மணக்கிறார்..! யார் அந்த நடிகை தெரியுமா..?

Published

on

தமிழ் சினிமாவில் “மி.ரு.க.ம்” திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமான நடிகர் தான் ஆதி அவர்கள். மேலும் இவர் நடித்த “ஈரம்” படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது என்று சொல்லலாம். மேலும், இந்த படத்தினை தொடர்ந்து “அரவான்”, “அய்யனார்” உள்ளிட்ட படங்களில் நடித்து மக்களிடத்தில் பிரபலமான நடிகராக மாறினார்.

மேலும் இவர் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான “மரகத நாணயம்” என்ற திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை நிக்கி கல்ராணி நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது இவர்கள் இருவரும் ரியல் ஜோடியாகியுள்ளனர், ஆம் நடிகர் ஆதி மற்றும் நடிகர் நிக்கி காதலித்து வந்ததாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது.

Advertisement

இந்நிலையில் நேற்று சென்னையில் நடிகர் ஆதி, மற்றும் நடிகை நிக்கி கல்ராணி இருவரும் நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நடிகர் ஆதி, மற்றும் நடிகை நிக்கி கல்ராணி இவர்களின் நிச்சயதார்த்தத்திற்கு தெலுங்கு திரையுலகை சேர்ந்த நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in