“இதற்காகத்தான் கடந்த 8 மாதங்களாக காத்திருந்தேன்..” கணித ஆசிரியரின் தலையிலேயே கத்தியால் குத்திய 13 வயது மாணவன்.. டிக்டாக்கில் போட்ட பகீர் பதிவு… திடுக்கிடும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

“இதற்காகத்தான் கடந்த 8 மாதங்களாக காத்திருந்தேன்..” கணித ஆசிரியரின் தலையிலேயே கத்தியால் குத்திய 13 வயது மாணவன்.. டிக்டாக்கில் போட்ட பகீர் பதிவு… திடுக்கிடும் வீடியோ..!!

Published

on

ரோமேனியா நாட்டின் பிஸ்ட்ரிட்சா நகரில் உள்ள ஒரு பள்ளியில், 13 வயது மாணவன் ஒருவன் தனது கணித ஆசிரியரின் தலையில் கத்தியால் குத்திய அதிர்ச்சி தரும் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தத் கொடூரத் தாக்குதலின் போது ஆசிரியரைக் காப்பாற்றுவதற்காக இடையில் புகுந்து தடுக்க முயன்ற 12 வயது மாணவன் ஒருவனுக்கும் கத்திக் குத்து விழுந்து பலத்த காயமேற்பட்டுள்ளது. பள்ளி வளாகத்திற்குள்ளேயே ஆசிரியர் மீது நடத்தப்பட்ட இந்த வன்முறைச் சம்பவம், அந்த நாட்டிலுள்ள பிற மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொடூரத் தாக்குதலை நடத்துவதற்குச் சற்று முன்பாக, அந்த 13 வயது மாணவன் தனது டிக்டாக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், இந்தத் தாக்குதலை நடத்துவதற்காகத் தான் கடந்த எட்டு மாதங்களாகக் காத்திருந்ததாக அவன் பதிவிட்டுள்ள திடுக்கிடும் உண்மை விசாரணையில் அம்பலமாகியுள்ளது. முன்கூட்டியே திட்டமிட்டு ஆசிரியரைக் கொல்ல முயன்ற இந்த விவகாரம் குறித்து உள்ளூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அந்த மாணவனைத் தடுத்துக் காவலில் வைத்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in