CRIME
நள்ளிரவில் பயங்கரம்.. கட்டுப்பாட்டை இழந்த பழ லாரி.. சிக்னலில் நின்றிருந்த 18 வயது மாணவியை தூக்கி வீசிய கொடூரம்.. பதறவைக்கும் வீடியோ..!!
வெனிசுலாவின் அபூரே மாகாணத்தில் உள்ள சான் பெர்னாண்டோ நகரில், கடந்த அக்டோபர் 19 திங்கள்கிழமை இரவு நேர்ந்த பயங்கர சாலை விபத்தில் யோஹாண்ட்ரி ஜிமினெஸ் என்ற 18 வயது மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அன்று இரவு 9:00 மணியளவில், பொருட்காட்சி திடல் பூங்கா அருகே உள்ள சிக்னல் சந்திப்பில் பழங்கள் ஏற்றி வந்த லாரி ஒன்று, மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதியர் உட்படச் சாலையில் நின்றுகொண்டிருந்த மக்கள் மீது கட்டுப்பாட்டை இழந்து கொடூரமாக மோதியுள்ளது. இந்தத் விபத்தில் அந்த இளம் மாணவி உட்படப் பலரும் தூக்கி வீசப்பட்டுப் பலத்த காயமடைந்தனர்.
விபத்து நடந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவசர உதவிக் குழுவினர், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த யோஹாண்ட்ரி ஜிமினெஸை மீட்டுப் பப்லோ அகோஸ்டா ஓர்டிஸ் மருத்துவமனைக்கு அவசரமாக அனுமதித்தனர். எனினும், அங்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பலனின்றி அந்த மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சோகமான விபத்து குறித்து உள்ளூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய பழ லாரியின் ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
