“நான் சாகுறதுக்கு இவங்கதான் காரணம்..” வாட்ஸ்அப்பில் வந்த அந்த ஒரு மெசேஜ்.. திருநங்கை யூடியூபருடன் கணவன் உல்லாசம்… கதறி அழுதுக்கொண்டே மனைவி எடுத்த விபரீத முடிவு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நான் சாகுறதுக்கு இவங்கதான் காரணம்..” வாட்ஸ்அப்பில் வந்த அந்த ஒரு மெசேஜ்.. திருநங்கை யூடியூபருடன் கணவன் உல்லாசம்… கதறி அழுதுக்கொண்டே மனைவி எடுத்த விபரீத முடிவு..!!

Published

on

சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியை சேர்ந்த தம்பதி ராஜேஷ் மற்றும் ரதி. கடந்த சில வருடங்களாக ராஜேஷ், சென்னை எண்ணூர் பகுதியை சேர்ந்த திருநங்கை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த திருநங்கை பிரபல யூடியூபர் என்றும் கூறப்படுகிறது. இதனால், ராஜேஷிற்கும், அவரது மனைவி ரதிக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. திருநங்கையுடன் ராஜேஷ் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதை ரதி கடுமையாக கண்டித்து வந்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, ரதி, ராஜேஷிடம் இந்த நிலை தொடர்ந்தால், தான் இந்த வீட்டில் இருக்க மாட்டேன் என்று கூறி வந்துள்ளார்.

ஆனால், இதனை பொருட்படுத்தாத ராஜேஷ், தொடர்ந்து திருநங்கையுடன் இருந்து வந்துள்ளார். இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரதி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது, ரதியின் மருத்துவ செலவிற்காக, திருநங்கை பணம் செலவழித்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, திருநங்கை எண்ணூர் காவல் நிலையத்தில், ராஜேஷிற்கும், ரதிக்கும் தான் செலவழித்த பணத்தை திரும்பப் பெற்றுத் தருமாறு புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், ராஜேஷிடம் விசாரணை நடத்திய எண்ணூர் காவல்துறையினர், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து ஜாமினில் வெளியில் வந்த ராஜேஷ் தொடர்ந்து, திருநங்கையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, நேற்று (அக்டோபர் 20), ராஜேஷிற்கும், அவரது மனைவி ரதிக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ராஜேஷ், ரதியிடம், இனி திருநங்கையுடன் தான் வாழ்வேன் என்று கூறி வீட்டை விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

Advertisement

இதனால் மனமுடைந்த ரதி, சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் வசிக்கும் அவரது சகோதரி ஜெபா என்ற ஜானகிக்கும், மற்றொரு உறவினருக்கும் வாட்ஸ் அப்பில், “இனி நான் வாழப்போவதில்லை. எனக்கு துரோகம் செய்தவர்களை சும்மா விடக்கூடாது. நான் உயிரிழந்ததற்கு ராஜேஷும், திருநங்கையும்தான் காரணம்” என்று வாய்ஸ் மெசேஜ் அனுப்பிவிட்டு, தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். வாய்ஸ் மெசேஜ்ஜை கேட்ட ஜானகி, ரதியின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவர் உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார். இதுகுறித்து நீலாங்கரை காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், ரதியின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து, குற்றவாளிகளை கைது செய்யும் வரை ரதியின் உடலை வாங்க மாட்டோம் என்று அவரது உறவினர்கள் மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரதியின் உறவினர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, அவர்கள் உடலை பெற்றுக்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக நீலாங்கரை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in