மர்ம மரணம்..! குடும்பங்களை விட்டுவிட்டு ஒன்றாக வாழ்ந்த ஜோடி… வாடகை அறையில் பிணமாக மீட்கப்பட்ட கர்ப்பிணி.. லிவ்-இன் உறவில் அரங்கேறிய பகீர் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மர்ம மரணம்..! குடும்பங்களை விட்டுவிட்டு ஒன்றாக வாழ்ந்த ஜோடி… வாடகை அறையில் பிணமாக மீட்கப்பட்ட கர்ப்பிணி.. லிவ்-இன் உறவில் அரங்கேறிய பகீர் சம்பவம்..!!

Published

on

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் பகுதியில் நிகழ்ந்த ஒரு திடுக்கிடும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 28 வயதுடைய குங்குமம் என்ற பெண், தனது வாடகை அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். ஐந்து மாத கர்ப்பிணியான அவரது கழுத்தில் காயங்கள் காணப்பட்டிருப்பது இந்தச் சம்பவத்தை ஒரு கொடூரமான கொலையாகக் காட்டுகிறது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, குங்குமத்துடன் வசித்து வந்த லீவ் இன் பார்ட்னரான 25 வயது யோகேஷ் சௌத்ரி என்பவரைக் காணவில்லை. அவர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது.

Advertisement

முதற்கட்ட விசாரணையில், குங்குமம் மற்றும் யோகேஷ் சௌத்ரி ஆகிய இருவருக்குமே ஏற்கனவே திருமணமாகி தலா இரண்டு குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இருவரும் தங்களது முந்தைய குடும்பங்களை விட்டுவிட்டு, ஒன்றாக இணைந்து வாழ்ந்து வந்த நிலையில் தற்போது இந்தத் துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in