பரபரப்பு..! 64 எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு தருவார்கள்… முதல்வர் பரபரப்பு பேச்சு.. அலறும் அரசியல் வட்டாரம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பரபரப்பு..! 64 எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு தருவார்கள்… முதல்வர் பரபரப்பு பேச்சு.. அலறும் அரசியல் வட்டாரம்..!!

Published

on

மேற்குவங்க சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினால், எதிர்க்கட்சியைச் சேர்ந்த 64 எம்எல்ஏக்கள் தனக்கு ஆதரவளிப்பார்கள் என அம்மாநில முதலமைச்சர் சுவேந்து அதிகாரி பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார். கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த அதிரடி கருத்தை வெளியிட்டுள்ளார். மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 208 இடங்களை வென்று பாஜக முதன்முறையாக ஆட்சி அமைத்தது. தற்போது தங்களின் பலம் 209 ஆக உயர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட கடுமையான உட்கட்சி பூசல் காரணமாக, அக்கட்சி இரண்டு பிரிவுகளாகப் பிளவுபட்டுள்ளது. இதில் ரிதப்ரதா பானர்ஜி தலைமையிலான அதிருப்தி அணியினர் தங்களை ‘ஜனநாயக திரிணாமுல் காங்கிரஸ்’ என்று அழைத்துக்கொண்டு, தனி அணியாகச் செயல்பட்டு வருகின்றனர். இந்தச் சூழலைப் பயன்படுத்திக் குறிப்பிட்ட முதலமைச்சர் சுவேந்து அதிகாரி, சட்டமன்றத்தில் நாளைக்கே நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தாலும், எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் 64 எம்எல்ஏக்களின் ஆதரவோடு பாஜக அரசுக்கு மொத்தம் 275 உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement

முதலமைச்சரின் இந்த அரசியல் கருத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ், முதலமைச்சரின் இந்த சவாலை ஏற்கும் வகையில், சட்டசபையில் ரகசிய வாக்குச்சீட்டு முறையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தத் தயாரா என்று சவால் விடுத்துள்ளார். அதேபோல், சிபிஎம் மூத்த தலைவர் சுஜன் சக்ரவர்த்தி இந்த அறிவிப்பை “ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்” என்று விமர்சித்துள்ளார். எனினும், ரிதப்ரதா பானர்ஜி தலைமையிலான அதிருப்தி குழுவினர் தங்களுக்கு பாஜகவுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், தங்களின் நிலைப்பாடு குறித்து முதலமைச்சர் மட்டுமே விளக்கமளிக்க முடியும் என்றும் தங்களது தரப்பு மறுப்பைத் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in