LATEST NEWS
“ஆளுங்கட்சியில் பாலியல் குற்றவாளிகள் பிரிவுன்னு ஒண்ணு ஆரம்பிக்கலாம் போல…” இதுதான் பெண்கள் பாதுகாப்பு லட்சணமா..? தமிழக அரசை கடுமையாக சாடிய உதயநிதி..!!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே நள்ளிரவில் வீட்டிற்குள் தூங்கிக்கொண்டிருந்த குடும்பத்தினர் மீது மர்ம கும்பல் ஒன்று ஆயுதங்களால் தாக்கியதில் மேரி ரெஜிலா என்ற பெண் உயிரிழந்தார். மேலும் அவரது கணவரும் மகனும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்த பெண்ணின் இரு மகள்களையும் அக்கும்பல் கடத்தியுள்ளது. பின்னர் அவர்கள் சில மணி நேரத்திற்குப் பிறகு மீட்கப்பட்டனர். இதுமட்டுமின்றி, வேளாங்கண்ணியில் வீட்டை விட்டு வெளியேறி வந்த சிறுமிகளை விடுதியில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவமும், திருநெல்வேலியில் மற்றொரு சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடுமையும் அரங்கேறியுள்ளன.
மேலும், த.வெ.க.வின் கன்னியாகுமரி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கிறிஸ்டோபர் என்பவர் கல்லூரி மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள கண்டன பதிவில், “ஆளுங்கட்சியில் பாலியல் குற்றவாளிகள் பிரிவு என்று ஒன்று ஆரம்பிக்கிற அளவுக்கு, பாலியல் குற்றவாளிகள் நிரம்பி வழிகிறார்கள்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
தொடர்ந்து அதில், இவர்கள் யார் மீதும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கைப் பார்ப்பதுதான் முதலமைச்சரின் பெண்கள் பாதுகாப்பு லட்சணமா என்றும், ஆட்சிக்கு வந்து பல மாதங்கள் ஆகியும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டாமல் Reels Shoot செய்யும் Dummy CM, எப்போது தான் குற்றங்களைக் கட்டுப்படுத்துவார்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இக்குற்றச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
