LATEST NEWS
திருமணமான சில வருடங்களில் விவாகரத்து பெற்ற மூத்த மகள்… இரண்டாவது மகளும் இப்படியா?… புலம்பி தவிக்கும் இயக்குனர் சங்கர்…!!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் சங்கர். இவர் தற்போது ஒரே நேரத்தில் இந்தியன் 2 திரைப்படத்தையும், கேம் சேஞ்சர் திரைப்படத்தையும் இயக்கி வருகின்றார். இந்த இரண்டு திரைப்படங்களும் பிரம்மாண்டமான முறையில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தன்னுடைய குடும்ப வாழ்க்கையில் சங்கர் தனது இரண்டு மகள்களால் நிம்மதி இல்லாமல் தவித்து வருவதாக பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
அதாவது மூத்த மகள் ஐஸ்வர்யா சில வருடங்களுக்கு முன்பு தன்னைவிட பணக்கார குடும்பத்தில் திருமணம் செய்து கொண்டார். கிரிக்கெட் வீரர் ரோகித் என்பவரை சங்கர் திருமணம் செய்து வைத்தார். தன்னுடைய மகள் நன்றாக இருப்பார் என்று நினைத்துப் பார்த்த சில மாதங்களில் அவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர். இவர்களின் விவாகரத்து வழக்கு தற்போது வரை நடந்து கொண்டிருக்கிறது.
அதனைப் போலவே இரண்டாவது மகள் அதிதி சங்கர் டாக்டர் பட்டத்தை முடித்த பிறகு சினிமாவில் நடிக்க வேண்டும் என்று அப்பாவிடம் மடம் பிடித்ததால் விருமன் மற்றும் மாவீரன் என அடுத்தடுத்து திரைப்படங்களில் ஹீரோயினியாக நடித்துள்ளார். ஆனால் ஒப்பந்தமான தேசங்களுக்கு தெரியாது என்றும் சினிமா வேண்டாமென்று எவ்வளவு கூறியும் அவர் அப்பா பேச்சை கேட்காமல் தானாக முடிவெடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இப்படி இரண்டு மகள்களையும் நினைத்தே தினம்தோறும் சங்கர் நிம்மதி இல்லாமல் தவித்து சினிமா நாட்டம் இல்லாமல் இருந்து வருவதாக பயில்வான் ரங்கநாதன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
