CINEMA
அதே இளமை இன்றும்.! வயது வெறும் நம்பர் தான்… குழந்தைகளுடன் நீச்சல் குளத்தில் செம என்ஜாய் செய்யும் சினேகா …!
தமிழ் சினிமாவில் ‘புன்னகை அரசி’ என்று அழைக்கப்படும் நடிகை சினேகா, 44 வயதிலும் தனது அழகையும் இளமையையும் மாறாமல் பராமரித்து வருகிறார். சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
இதில் அவர் தனது மகன் விஹான் மற்றும் மகள் ஆத்யந்தா ஆகியோருடன் நீர் விளையாட்டுகளில் ஈடுபட்டு மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பது பதிவாகியுள்ளது. இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் பரவி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.
‘என்னவளே’ படம் மூலம் அறிமுகமான சினேகா, தளபதி விஜய்யுடன் நடித்த ‘வசீகரா’ படத்திற்குப் பிறகு முன்னணி நடிகையாக உயர்ந்தார். தனது எதார்த்தமான நடிப்பு மற்றும் வசீகரமான சிரிப்பால் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார். நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர், திருமணத்திற்குப் பிறகும் திரையுலகில் வெற்றிகரமாக இயங்கி வருகிறார். திரைப்படங்கள் மட்டுமின்றி, சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்று வருகிறார்.
தற்போது குடும்பத்துடன் விடுமுறையைக் கொண்டாடி வரும் சினேகா, குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட இந்த க்யூட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. “44 வயதிலும் குறையாத அழகு” என ரசிகர்கள் அவரை வியந்து பாராட்டி வருகின்றனர்.
திரையில் குடும்பப் பாங்கான வேடங்களில் அதிகம் தோன்றும் சினேகாவின் இந்த ‘கூல்’ லுக் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் லைக்குகளை குவித்து வருகின்றன.
