“என் கதையை நம்பியதற்கு நன்றி…அம்மா கொடுத்த சான்ஸ்.. அப்பாவுக்கு நோ சொன்ன சஞ்சய்…ட்ரெய்லருக்கு பின் ஜேசன் சஞ்சய் போட்ட அந்த ஒற்றை பதிவு…ஜேசன் சஞ்சய்க்கு ‘லைகா’ சான்ஸ் கொடுத்ததன் நிஜ பின்னணி…! – cinefeeds
Connect with us

CINEMA

“என் கதையை நம்பியதற்கு நன்றி…அம்மா கொடுத்த சான்ஸ்.. அப்பாவுக்கு நோ சொன்ன சஞ்சய்…ட்ரெய்லருக்கு பின் ஜேசன் சஞ்சய் போட்ட அந்த ஒற்றை பதிவு…ஜேசன் சஞ்சய்க்கு ‘லைகா’ சான்ஸ் கொடுத்ததன் நிஜ பின்னணி…!

Published

on

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ (Sigma) திரைப்படம், நீண்ட படப்பிடிப்பிற்குப் பிறகு ஒருவழியாக நிறைவடைந்து வரும் ஜூலை 31ஆம் தேதி திரைக்கு வரத் தயாராகிவிட்டது. லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ள இத்திரைப்படத்தில், பிரபல தெலுங்கு மற்றும் தமிழ் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், நடன இயக்குநர் ராஜூ சுந்தரம் உள்ளிட்டப் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த ஆக்ஷன் படத்திற்கு, முன்னணி இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். சிறு வயதில் ‘போக்கிரி’, ‘வேட்டைக்காரன்’ போன்ற படங்களின் பாடல்களில் சில நிமிடங்கள் தோன்றி, தந்தையைப் போலவே நடிகராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜேசன் சஞ்சய், லண்டனில் திரைப்படம் இயக்கம் சார்ந்த படிப்பை முடித்துவிட்டு தற்போது இயக்குநராகத் தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியுள்ளார்.

இளம் வயதிலேயே ஜேசனுக்கு லைகா போன்ற பெரிய நிறுவனத்தில் படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது குறித்துப் பல்வேறு விவாதங்கள் எழுந்தன. வாரிசு அரசியல் (Nepotism) என்று ஒருதரப்பினர் விமர்சித்தாலும், இந்த வாய்ப்பை விஜய் வாங்கித் தரவில்லை என்றும், லண்டனில் இருக்கும் அவரது தாய் சங்கீதா மற்றும் அவரது தரப்பினரே இதற்குக் களம் அமைத்துக் கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாயின. இருப்பினும், திறமை இல்லாமல் இந்த வாய்ப்பு ஜேசனுக்குக் கிடைத்திருக்காது என்பதே திரையுலகினரின் கருத்தாக உள்ளது. இதற்கிடையே, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ட்ரெய்லரில் தனது தந்தை விஜய்யின் இனிஷியலான ‘V’ என்பதைத் தவிர்த்து, வெறும் ‘ஜேசன் சஞ்சய்’ என்றே அவர் குறிப்பிட்டிருந்தார். பெற்றோருக்குள் இருக்கும் விவாகரத்து விவகாரத்தில் தாய் சங்கீதா பக்கம் நிற்பதாலேயே அவர் தந்தையின் அடையாளத்தைத் தவிர்த்துள்ளார் என்ற பேச்சும் நெட்டிசன்கள் மத்தியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.

Advertisement

இந்நிலையில், சமூக வலைத்தள பக்கத்தில் ‘ஜேசன் சஞ்சய்’ ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள ஒரு பதிவு இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. “என் மேல் நம்பிக்கை வைத்து ஆதரவு தெரிவித்ததற்கும், எனது கதையை நம்பித் தொடர்ந்து ஆதரவு கொடுத்த லைகா சுபாஸ்கரனுக்கும் நன்றி. சிக்மா எனக்கு ஒரு மறக்க முடியாத பயணமாக அமைந்தது. அர்ப்பணிப்புடன் செயல்பட்ட நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் பணியாற்றியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஜூலை 31ஆம் தேதி சிக்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க ஆவலோடு காத்திருக்கிறேன்” என்று அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது. ‘Jason Sanjay Official’ என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த உருக்கமான பதிவு, சஞ்சய்யின் அதிகாரப்பூர்வ கணக்கா அல்லது ரசிகர்கள் நடத்தும் கணக்கா என்ற குழப்பத்திலும் விவாதத்திலும் நெட்டிசன்கள் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in