விநியோக முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி…! அரசு கஜானாவிற்கு ரூ.1,200 கோடி…! டாஸ்மாக் பெட்டிகளுக்கான கட்டண வசூலில் முதலமைச்சர் விஜய் அதிரடி மாற்றம்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

விநியோக முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி…! அரசு கஜானாவிற்கு ரூ.1,200 கோடி…! டாஸ்மாக் பெட்டிகளுக்கான கட்டண வசூலில் முதலமைச்சர் விஜய் அதிரடி மாற்றம்…!!

Published

on

தமிழகத்தில் இயங்கி வந்த 4,787 டாஸ்மாக் மதுபானக் கடைகளில், கல்விக்கூடங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் 500 மீட்டர் சுற்றளவுக்குள் அமைந்திருந்த 717 கடைகளையும், அவற்றின் பார்களையும் மூடுவதற்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, தற்போது மீதமுள்ள அனைத்துக் கடைகளிலும் தீவிர ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், டாஸ்மாக் நிர்வாகத்தில் நிலவும் முறைகேடுகளைக் களைந்து வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரும் நோக்கில், மதுபானப் பெட்டிகளுக்கான கட்டண வசூல் முறையில் மிக முக்கியமானதொரு சீர்திருத்தத்தை மதுவிலக்குத் துறை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, இதுவரை முறைசாரா கட்டணங்களாகவும் கட்சி நிதியாகவும் சட்டவிரோதமாக வசூலிக்கப்பட்டு வந்த பெருந்தொகை, இனி நேரடியாக அரசு கஜானாவிற்குச் செல்லும் வகையில் நடைமுறை மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலமாக, ஒரு ஹாட் பெட்டிக்கு 90 ரூபாயும், பீர் பெட்டிக்கு 40 ரூபாயும் மற்றும் ஒயின் பெட்டிகளுக்கான கூடுதல் கட்டணமும் நேரடியாக அரசு கணக்கில் வரவு வைக்கப்படும். தமிழகத்தில் மாதந்தோறும் சராசரியாக 88 லட்சம் முதல் 90 லட்சம் வரையிலான மதுப்பெட்டிகள் விநியோகம் செய்யப்படுவதால், இந்த அதிரடி மாற்றத்தின் மூலம் மாதத்திற்கு 100 கோடி ரூபாயும், ஆண்டுக்கு 1,200 கோடி ரூபாயும் அரசுக்குக் கூடுதல் வருவாயாகக் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in