LATEST NEWS
“எக்ஸாம் டைம்ல என்கிட்ட பதில் கேட்காதீங்க…” தேர்வு எழுத உதவி கேட்ட மாணவிக்குச் சாட்ஜிபிடி கொடுத்த செக்… விவாதத்தை கிளப்பிய சம்பவம்…!!
உலக அளவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்து வரும் வேளையில், ஆன்லைன் தேர்வு எழுதிய மாணவி ஒருவருக்குச் சாட்ஜிபிடி மூலம் நேர்ந்த விசித்திர அனுபவம் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. புஷ்பாஞ்சலி சிங் என்ற அந்த மாணவி, தனது தேர்வுக்குத் தேவையான பதில்களைத் தரும்படி சாட்ஜிபிடியிடம் உதவி கேட்டுள்ளார். அதற்குப் பதிலளித்த அந்த ஏ.ஐ. தளம், “நீங்கள் தற்போது ஏதோவொரு நேரடித் தேர்வு அல்லது வினாடி-வினா போட்டியின் நடுவில் இருந்துகொண்டு இந்தத் தகவல்களைக் கேட்பது போலத் தெரிகிறது; கல்வி சார்ந்த நெறிமுறைகளுக்கு எதிராகவும், நேர்மையற்ற முறையிலும் நடக்கும் தேர்வுகளுக்கு என்னால் பதிலளிக்க முடியாது” என்று கூறி அவரது கோரிக்கையை அதிரடியாக நிராகரித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவின் இந்த சமயோசிதமான பதிலைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, அந்த உரையாடலின் நிழற்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இது தற்போது நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகிப் பலதரப்பட்ட கருத்துக்களைப் பெற்று வருகிறது. இதற்கு கமெண்ட் செய்த பயனர் ஒருவர், “அடுத்த முறை கேட்கும்போது தேர்வு நடக்கிறது என்ற விபரத்தைக் குறிப்பிடாமல் சாதுரியமாகக் கேட்டுப் பாருங்கள்” என ஆலோசனைக் கூறியுள்ளார்; மற்றொருவரோ, சாட்ஜிபிடியை நம்பி நேர்காணலுக்குச் செல்பவர்கள் அந்த வேலைக்கே தகுதியற்றவர்கள் எனச் சாடியுள்ளார். கல்வித்துறையில் முறைகேடுகளைத் தடுக்க ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் வகுக்கப்பட்டுள்ள இத்தகைய வழிகாட்டு நெறிமுறைகள் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகின்றன.
