LATEST NEWS
முட்டையை கழுவாமல் அப்படியே சமைக்கிறீங்களா? ஐயோ.. இந்த ஆபத்து தெரியாம போச்சே… தெரியாம கூட இந்த தப்பை இனி பண்ணாதீங்க..!!
முட்டை மனித உடலுக்கு அதிக சத்துக்களைத் தரும் ஒரு முக்கிய உணவாகும். நாம் கடைகளில் வாங்கும் சில முட்டைகள் சுத்திகரிக்கப்பட்டு விற்கப்பட்டாலும், சந்தைகள் மற்றும் பண்ணைகளில் இருந்து நேரடியாக வாங்கும் முட்டைகள் கிருமி நீக்கம் செய்யப்படாமல் அப்படியே விற்கப்படுகின்றன. இத்தகைய முட்டைகளின் ஓடுகளில் கோழி எச்சம், இறகுகள், தூசிகள் மற்றும் அழுக்குகள் படிந்திருக்கும். இவற்றின் மூலமாக ‘சால்மோனெல்லா’ போன்ற ஆபத்தான பாக்டீரியாக்கள் பரவுகின்றன. இதனால் முட்டையைக் கழுவாமல் சமைக்கும் போது வயிற்று வலி, வாந்தி மற்றும் உணவு நச்சுத்தன்மை போன்ற உடல்நலக் குறைபாடுகள் ஏற்படக்கூடும்.
முட்டையின் வெளி ஓடு பார்ப்பதற்கு மிகவும் கடினமானதாகத் தோன்றினாலும், அதில் மிக நுண்ணிய துளைகள்உள்ளன. முட்டையின் மேல் இருக்கும் பாக்டீரியாக்கள் இந்தத் துளைகளின் வழியாக மிக எளிதாக உள்ளே சென்று முட்டையின் உட்கருவைச் சென்றடைந்துவிடும். இதனால், முட்டையைச் சமைப்பதற்கு முன்பாகக் கண்டிப்பாகக் கழுவ வேண்டியது அவசியமாகிறது.
முட்டைகளைப் பயன்படுத்தும் போது அவற்றை எப்போதும் குளிர்ந்த நீரில் நன்றாகக் கழுவ வேண்டும். கழுவிய பின்னர், ஒரு காய்ந்த துணி அல்லது டிஷ்யூ பேப்பர் கொண்டு முட்டைகளைத் துடைத்து எடுக்க வேண்டும். மேலும், முட்டைகளை மிக அதிக நாட்கள் ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்; ஏனெனில் இதுவும் பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு ஒரு முக்கியக் காரணமாக அமைந்துவிடும்.
