LATEST NEWS
வெடித்தது மோதல்..! காட்டுமன்னார் கோவிலில் போட்டியிடாதது ஏன்? “அங்க போய் கேளுங்க” திமுகவை நோக்கி கை காட்டிய திருமாவளவன்… தமிழக அரசியலில் பரபரப்பு..!!
மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் தொல். திருமாவளவன், தான் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடாமல் பின்வாங்கியது குறித்துப் பரவலாக எழும் விமர்சனங்களுக்கு அதிரடியாகப் பதிலடி கொடுத்துள்ளார். “காட்டுமன்னார்கோவில் தொகுதியில் நான் ஏன் போட்டியிடவில்லை என்று என்னிடம் தொடர்ந்து கேள்வி கேட்கிறீர்களே, அதற்கான காரணத்தை திமுக தலைவரிடமோ அல்லது அக்கட்சியின் மூத்த தலைவர்களிடமோ யாராவது எப்போதாவது கேட்டதுண்டா?” என்று அவர் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தல் களம் என்பது ஒரு போர் போன்றது என்றும், போரில் பின்வாங்குவது கூட ஒரு வகையான அரசியல் வியூகம் தான் என்றும் அவர் தனது உரையில் தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும், விசிக-வின் நாடாளுமன்ற பலத்தை மையமாகக் கொண்டு தங்களை அரசியல் ரீதியாகக் கேலி செய்தவர்களுக்கும் அவர் மிகக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். கடந்த காலங்களில் தங்களுக்கு வெறும் இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்ட போது, அதைச் சுட்டிக்காட்டி பலர் கிண்டல் செய்ததாகக் குறிப்பிட்ட அவர், இன்று அந்த இரண்டு தொகுதிகளின் அருமையும், விசிக-வின் அரசியல் முக்கியத்துவமும் உலகத்திற்கே மிக நன்றாகத் தெரிந்துள்ளது என்று பெருமிதத்துடன் கூறினார். தங்களை எந்தவொரு அரசியல் சக்தியும் ஓரம் கட்டிவிட முடியாது என்பதைத் தங்களின் தற்போதைய அரசியல் நகர்வுகள் நிரூபித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்
