BREAKING: தேர்தலில் போட்டியிடவில்லை… சற்றுமுன் திருமாவளவன் பரபரப்பு அறிவிப்பு…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING: தேர்தலில் போட்டியிடவில்லை… சற்றுமுன் திருமாவளவன் பரபரப்பு அறிவிப்பு…!!

Published

on

திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடப் போவதில்லை என்றும், தமிழக அரசுக்குத் தங்களது ஆதரவு தொடர்ந்து நீடிக்கும் என்றும் அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெளிவாக அறிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அமைச்சரவை இலாகாவை மாற்றித் தரக்கோரியோ அல்லது திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்புக் கேட்டோ தவெக தலைமையிலான அரசுக்கு விசிக எந்தவித அழுத்தமும் கொடுக்கவில்லை என்றும், பரவி வரும் செய்திகள் அனைத்தும் ஊகங்களே என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

இதே சந்திப்பில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்வது குறித்தும் திருமாவளவன் கவலை தெரிவித்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் எந்தப் பின்னணியில் இந்த முடிவை எடுக்கிறார்கள் என்று தெரியவில்லை எனக் குறிப்பிட்ட அவர், இதனை வெறும் உட்கட்சி விவகாரமாக கடந்துவிட முடியாது என்றும், இதுபோன்ற திடீர் ராஜினாமாக்கள் ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானது அல்ல என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in