“அமைதியா இருந்தா கோழை.. பேசினா குற்றவாளி” வீட்டு வேலை செஞ்சும் அடிச்சாங்க… மனைவி, மாமனார் கொடுத்த சித்திரவதை… தற்கொலைக்கு முன் நபர் வெளியிட்ட பகீர் வீடியோ.!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அமைதியா இருந்தா கோழை.. பேசினா குற்றவாளி” வீட்டு வேலை செஞ்சும் அடிச்சாங்க… மனைவி, மாமனார் கொடுத்த சித்திரவதை… தற்கொலைக்கு முன் நபர் வெளியிட்ட பகீர் வீடியோ.!!

Published

on

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தைச் சேர்ந்த 28 வயதான துணி வியாபாரி ராகுல், தனது கடையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முன்பாக அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட உருக்கமான வீடியோவில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்ட தனது மனைவி ஜோதி, மாமனார் பிட்டு, மாமியார் வீணா மற்றும் மைத்துனி நீத்து ஆகியோர் தனக்குத் தொடர் மன உளைச்சலையும் சித்திரவதையையும் அளித்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

அந்த வீடியோவில், “நான் வீட்டில் தரை துடைப்பது, பாத்திரங்களைக் கழுவுவது உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் செய்த போதிலும், அவர்கள் என்னை அடித்துத் துன்புறுத்தினார்கள்; என் மீது பொய் வழக்குகளையும் தொடர்ந்தார்கள்” என்று ராகுல் கண்ணீருடன் தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், திருமணத்திற்குப் பிறகு தனது பெற்றோரைச் சந்திக்கக்கூட அவர்கள் அனுமதிக்கவில்லை என்றும் ராகுலின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். ராகுலின் இந்த மரணம் மற்றும் அவர் எழுப்பியுள்ள புகார்கள், தற்காலத்தில் திருமண உறவுகளில் ஆண்கள் எதிர்கொள்ளும் மன ரீதியான மற்றும் சட்ட ரீதியான அழுத்தங்கள் குறித்த விவாதங்களைச் சமூக வலைதளங்களில் எழுப்பியுள்ளது.

Advertisement

Advertisement

இதுபோன்ற இக்கட்டான சூழலில், ஒரு சராசரி மனிதன் வீட்டை நிர்வகித்தாலும், பெற்றோரை விட்டுப் பிரிந்தாலும், சம்பாதிக்கும் ஏடிஎம் இயந்திரமாகத் திகழ்ந்தாலும் ஏதோ ஒரு வகையில் குற்றவாளியாக்கப்படுகிறான் என்ற ஆதங்கம் பரவலாகப் பேசப்படுகிறது. அமைதியாக இருந்தால் கோழை என்றும், குரல் கொடுத்தால் எதிரி என்றும் முத்திரை குத்தப்பட்டு, இறுதியில் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்ளும் போது அது வெறும் ஒரு செய்தியாக மட்டுமே கடந்து போகிறது. ஆண்களின் மன வேதனையையும், குடும்பத் தகராறுகளால் அவர்கள் சந்திக்கும் துயரங்களையும் இந்தச் சமூகம் என்றுதான் புரிந்து கொள்ளப் போகிறது என்ற கேள்வியும், வேதனையும் இந்தச் சம்பவத்தின் மூலம் மீண்டும் வலுப்பெற்றுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in