“பிரசவ வலியில் கதறிய கர்ப்பிணி மனைவி.. போதையில் தள்ளாடிய கணவன்… போலீசார் செய்த அந்த ஒரு செயல்.. மனிதநேயம் இன்னும் சாகல… பாராட்டும் இணையவாசிகள்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“பிரசவ வலியில் கதறிய கர்ப்பிணி மனைவி.. போதையில் தள்ளாடிய கணவன்… போலீசார் செய்த அந்த ஒரு செயல்.. மனிதநேயம் இன்னும் சாகல… பாராட்டும் இணையவாசிகள்…!!

Published

on

மகாராஷ்டிராவில் போலீஸ் வாகன சோதனையின் போது சந்தேகத்திற்குரிய வகையில் வந்த ஒரு கார் தடுத்து நிறுத்தப்பட்டது. காரை ஓட்டி வந்த நபர் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு, போக்குவரத்து விதிகளை மீறியிருந்தது விசாரணையில் தெரியவந்தது. ஆனால், அதே காரின் பின் இருக்கையில் அவரது கர்ப்பிணி மனைவி கடுமையான பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்ததையும், அங்கு ஒவ்வொரு நொடியும் மிகவும் முக்கியமானது என்பதையும் போலீசார் கவனித்தனர்.சட்டத்தை மீறிய நபர் மீது நடவடிக்கை எடுப்பதை விட, அந்தப் பெண்ணின் உயிரைக் காப்பதே முக்கியம் என நினைத்த போலீசார் மனிதநேயத்திற்கு முதலிடம் கொடுத்தனர்.

https://twitter.com/Nandini_352/status/2087481129616183652/video/2

Advertisement

உடனடியாக அந்த நபரை காரின் பின் இருக்கைக்கு மாற்றிவிட்டு, போலீஸ் அதிகாரியே காரை ஓட்டிச் சென்று மிக விரைவாக அந்தப் பெண்ணை அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தார்.சரியான நேரத்தில் மருத்துவமனைக்குச் சென்றதால், அந்தப் பெண்ணுக்கு பாதுகாப்பான முறையில் குழந்தை பிறந்தது. சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும் என்பது முக்கியம்தான், ஆனால் இக்கட்டான சூழ்நிலையில் ஒரு உயிரைக் காப்பது அதைவிடப் பெரிய கடமை என்பதை நிரூபித்த மகாராஷ்டிரா போலீசார், தங்களின் மனிதநேயமிக்க செயலால் சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளைப் பெற்று வருகின்றனர்

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in